உத்தரபிரதேசம் - சமாஜ்வாதி கட்சி தலைவர் சென்ற கார் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்ற கண்டெய்னர் லாரி - வீடியோ


உத்தரபிரதேசம் - சமாஜ்வாதி கட்சி தலைவர் சென்ற கார் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்ற கண்டெய்னர் லாரி - வீடியோ
x

Image Courtesy: ANI 

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரின் கார் மீது லாரி மோதி 500 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது.

மெயின்புரி,

உத்தரபிரதேச மாநிலம், சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ். இவர் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி, 500 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று நின்றது.

இதனையடுத்து, காரில் சிக்கி இருந்த தேவேந்திர சிங்கை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மெயின்புரி எஸ்.பி. கூறுகையில், சமாஜ்வாதி கட்சி தலைவரின் கார் மீது லாரி மோதியதில் 500 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இந்த சம்பவத்தில் இட்டா பகுதியை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


1 More update

Next Story