உத்தர பிரதேசத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா - மாநில அமைச்சரவை ஒப்புதல்


உத்தர பிரதேசத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா - மாநில அமைச்சரவை ஒப்புதல்
x

Image Courtesy : ANI

அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்திற்கு அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த திட்டத்திற்கான செலவு ரூ.359 கோடியாக வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.144.90 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேமராக்களில் பதிவாகும் தரவுகள் 12 மாதங்கள் வரை சேமித்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் மீதான வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.


Next Story