வந்தேபாரத் ரெயில் டிக்கெட் கட்டண விவரம் அறிவிப்பு


வந்தேபாரத் ரெயில் டிக்கெட் கட்டண விவரம் அறிவிப்பு
x

வந்தே பாரத் ரெயில் டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மைசூருவில் இருந்து சென்னைக்கு சாதாரண வகுப்பு கட்டணம் ரூ.921 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கோலார் தங்கவயல்:-

வந்தே பாரத் ரெயில்

மைசூரு - சென்னை இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவை நாளை(11-ந் தேதி) முதல் தொடங்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். நேற்று முன்தினம் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது பங்காருபேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

அப்போது வந்தே பாரத் ரெயிலை பார்க்க ஏராளமானோர் ரெயில் நிலையத்தில் திரண்டிருந்தனர். கோலார் தங்கவயல், கோலார், பங்காருபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அதிவிரைவு ரெயில் பங்காருபேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டண விவரம்

இந்த ரெயிலில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு செல்ல சாதாரண வகுப்பு கட்டணம் ரூ.921 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வசதிகளுடன் பயணிக்க கட்டணமாக ரூ.1,880-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு சாதாரண வகுப்பு கட்டணம் ரூ.368 ஆகவும், சிறப்பு வசதி கட்டணம் ரூ.768 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story