நான் ஏன் இந்தியில் பேசவேண்டும்... இது என் நிலம்... நீங்கள் கன்னட மொழியில் பேசுங்கள் - வட இந்திய பயணியை தெறிக்கவிட்ட ஆட்டோ டிரைவர்


நான் ஏன் இந்தியில் பேசவேண்டும்... இது என் நிலம்... நீங்கள் கன்னட மொழியில் பேசுங்கள் - வட இந்திய பயணியை தெறிக்கவிட்ட ஆட்டோ டிரைவர்
x

இந்தியில் பேசிய பெண் பயணியிடம் இது என் நிலம் நீங்கள் கன்னட மொழியில் பேசுங்கள் என்று இந்தியில் பேசிய வட இந்திய பயணியிடம் ஆட்டோ டிரைவர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ டிரைவரிடம் வட இந்திய பெண் பயணி இந்தி மொழியில் பேசியபோது அதற்கு ஆட்டோ டிரைவர் பதிலடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வட இந்திய பெண் பயணி பெங்களூரு ஆட்டோ டிரைவரிடம் கன்னடா மொழியில் பேசாமல் இந்தி மொழியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் கன்னடா மொழியில் பேசும்படி கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் பயணி தொடர்ந்து இந்தி மொழியில் பேசவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு ஆட்டோ டிரைவருக்கும், இந்தியில் பேசிய வட இந்திய பெண் பயணிக்கும் இடையேயான வாக்குவாதம் தொடர்பான முழு உரையாடல்:-

ஆட்டோ டிரைவர்: நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்?

வட இந்திய பெண் பயணி: சரி... சரி... சரி...

ஆட்டோ டிரைவர்: இது கர்நாடகா. நீங்கள் கன்னட மொழியில் தான் பேசவேண்டும். நீங்கள் வட இந்திய பிச்சைக்காரர்கள்.

வட இந்திய பெண் பயணி: ஏன். நாங்கள் கன்னட மொழியில் பேசமாட்டோம்.

ஆட்டோ டிரைவர்: இது உங்கள் நிலம் அல்ல... எங்கள் நிலம். நீங்கள் கன்னட மொழியில் தான் பேச வேண்டும். நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்' என்றார்.

கர்நாடக ஆட்டோ டிரைவருக்கும், வட இந்திய பெண் பயணிக்கும் இடையே கன்னடா - இந்தி மொழி இடையேயான வாக்குவாதம் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story