புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களை கட்டாயப்படுத்தி செல்பி எடுக்க முயன்றதால் வாக்குவாதம் - மோதல்


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களை கட்டாயப்படுத்தி செல்பி எடுக்க முயன்றதால் வாக்குவாதம் - மோதல்
x
தினத்தந்தி 1 Jan 2023 3:43 PM IST (Updated: 1 Jan 2023 3:43 PM IST)
t-max-icont-min-icon

2023 ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

லக்னோ,

2023 ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி நேற்று இரவு முதல் நாடு முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். கடற்கரைகள், சொகுசு விடுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மக்கள் புத்தாண்டை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கவுர் சிட்டி முதல் அவன்யூவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

அப்போது, அந்த குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆரமாரமாக நடனமாடிக்கொண்டிருந்த திருமணமான 2 பெண்களுடன் சில ஆண்கள் வலுக்கட்டாயமாக செல்பி எடுக்க முயற்சித்தனர்.

அப்போது, இதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த பெண்களின் கணவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தினர். இதனால், அந்த கும்பல் அந்த பெண்களின் கணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், இந்த மோதல் இரு தரப்பு இடையேயான மோதலாக மாறியது. இதில், குடியிருப்பின் காவலாளிகள் உள்பட சிலர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களை செல்பி எடுக்க கட்டாயப்படுத்தி மோதலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.



Next Story