ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் - விரைந்து காப்பாற்றிய ரெயில்வே போலீசார்..!


ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் - விரைந்து காப்பாற்றிய ரெயில்வே போலீசார்..!
x

ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை துரிதமாக செயல்பட்ட ரெயில்வே போலீசார் காப்பாற்றினர்.

பெங்களூரு,

பெங்களூரு கேஆர் புரம் ரெயில்நிலையத்தில் ரெயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் நபர் ஒருவர் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்தார். மீண்டும் நடைமேடையில் ஏற முயற்சித்தும் அவரால் ஏற முடியவில்லை.

இந்த நிலையில் அவர் மீண்டும் நடைமேடையில் ஏற சிரமப்படுவதைக் கண்ட ரெயில்வே போலீசார், தண்டவாளத்தின் இருபுறமும் அவருக்கு உதவி செய்து, அவரை பாதுகாப்பாக மேலே இழுத்தனர். அந்த நபர் காப்பாற்றப்பட்ட சில நொடிகளில் ரெயில் பிளாட்பாரத்தை நெருங்கியது.

இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சியை ரெயில்வே அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.



Next Story