லாரி மீது பாய்ந்த ஆட்டோ: தூக்கி வீசப்பட்ட பள்ளி குழந்தைகள் - மனதை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி


லாரி மீது பாய்ந்த ஆட்டோ: தூக்கி வீசப்பட்ட பள்ளி குழந்தைகள் - மனதை பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
x

ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் வெளியில் தூக்கிவீசப்பட்டனர்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் தியேட்டர் அருகில் இன்று காலை 7 மணியளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலையின் சந்திப்பின் போது லாரி மீது மோதாமல் இருக்க ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புறமாக கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் வெளியில் தூக்கிவீசப்பட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்த 8 குழந்தைகளை 4 பேர் வீடு திரும்பிய நிலையில் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story