விசாகப்பட்டினம்: ஆன்லைனில் பகுதி நேர வேலை என்ற பெயரில் மோசடி செய்த கும்பல் கைது


விசாகப்பட்டினம்: ஆன்லைனில் பகுதி நேர வேலை என்ற பெயரில் மோசடி செய்த கும்பல் கைது
x

ஆன்லைனில் பகுதி நேர வேலை என்ற பெயரில் மோசடி செய்த கும்பலை விசாகப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

விசாகப்பட்டினம்,

ஆன்லைனில் பகுதி நேர வேலை என்ற பெயரில் மோசடி செய்த கும்பலை விசாகப்பட்டினம் போலீசார் நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக பீகாரைச் சேரந்த சுமன் சா மற்றும் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுபம் சிங், தீபக் சக்ரா, ரன்வீர் சவுகான், மிட்டு லா ஜாட் மற்றும் விகாஸ் பாசிந்தா ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 20 சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், 37 வங்கி காசோலைகள், 56 போலி முத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் மட்டும் 38 இல்லத்தரசிகள், 21 வேலையில்லாத இளைஞர்கள், 3 தனியார் ஊழியர்கள், 5 அரசு ஊழியர்கள், 2 டாக்டர்கள் உட்பட மொத்தம் 78 பேர் 2.45 கோடி ரூபாய் பணத்தை இந்த கும்பலிடம் இழந்துள்ளனர். விசாகா சைபர் கிரைம் போலீசாரின் முயற்சியின் பேரில் அந்த கும்பல் அடையாளம் காணப்பட்டது.

இது தொடர்பாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ஏமாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இல்லத்தரசிகள். பகுதி நேர வேலை என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வேலை செய்யாமல் பணம் தருவதாக உறுதியளிப்பவர்களிடம் ஏமாறாதீர்கள். ராஜஸ்தானில் இருந்து வருபவர்கள் மீது விசாகப்பட்டினம் போலீசார் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல் நாடு முழுவதும் மோசடியில் ஈடுபடுகிறது என்று கூறினார்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


Next Story