வாக்காளர்களின் தகவல்கள் திருட்டு விவகாரம்:


வாக்காளர்களின் தகவல்கள் திருட்டு விவகாரம்:
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என்று பசவராஜ் பொம்மைக்கு டி.கே சிவகுமார் சவால் விட்டுள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியது குறித்து போலீஸ் கமிஷனர் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். வாக்காளர்களின் தகவல்களை திருடியது மிகப்பெரிய குற்றமாகும். இந்த விவகாரம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேணடும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மேடைகளில் பேசும் போதெல்லாம் தைரியம் இருந்தால், தைரியம் இருந்தால் என்று காங்கிரசை குற்றம்சாட்டி பேசி வருகிறார்.

தற்போது வாக்காளர்களின் தகவல்களை திருடி பெரிய மோசடி செய்திருக்கிறார்கள். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தைரியம் இருந்தால், வாக்காளர்கள் தகவல்களை திருடிய விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட தயாரா?. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story