துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு: நாடாளுமன்றத்தில் இன்று பிரிவு உபசார விழா!


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு: நாடாளுமன்றத்தில் இன்று பிரிவு உபசார விழா!
x

துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி இன்று பிரிவு உபசார விழா நடைபெறும்.

புதுடெல்லி,

நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.

இந்த நிலையில் வருகிற 10-ந்தேதியுடன் ஓய்வு பெறும் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, ஜெகதீப் தன்கர் நேற்று சந்தித்தார்.

துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் ஆன வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி, அவருக்கு இன்று நாடாளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதையொட்டி அவருக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெறும்.


Next Story