டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்?- வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் டுவீட்


டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்?- வைரலாகும் ஆனந்த் மகேந்திராவின் டுவீட்
x

Image Courtesy: PTI/ AFP

ஆனந்த் மகேந்திரா டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என நாய் ஒன்றிடம் ஆருடம் கேட்டுள்ளார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதே போல் நாளை மறுதினம் நடக்கவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதனால் தற்போதே இறுதி போட்டிக்கு எந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. குறிப்பாக 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பை வெல்லாதா இந்திய அணி, இந்த முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலைமைலயிலான இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்ற அதீத நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

இது போன்ற மிகப்பெரிய விளையாட்டு தொடர்கள் இறுதி கட்டத்தை நெருங்கும் போது யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆருடத்தை விலங்குகளிடம் கேட்டு கணிக்கும் வழக்கம் பல நாடுகளில் உண்டு.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என நாய் ஒன்றிடம் ஆருடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அவர் தனது டுவிட்டர் பதிவில், நாய் ஒன்று சாகசமான முறையில் மரத்தில் ஏறி சுவருக்கு மறுபக்கம் எட்டி பார்க்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பின்னர் அந்த பதிவில் அவர், இந்த நாய்க்குட்டியிடம் எதிர்காலத்தை பார்த்து டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் யார் நுழைவார்கள் எனக் கேட்டேன். அது வித்தியாசமான முறையில் சுவரை தாண்டி பார்த்துக்கொண்டிருக்கிறது. அது என்ன பார்த்திருக்கும் என நினைக்கிறீர்கள்" என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனந்த் மகேந்திராவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நாட்டின் முன்னணி தொழிலதிபராக உள்ள மகேந்திரா பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். தனித்துவமான விஷயங்கள் மற்றும் தனிமனிதர்களின் சாதனைகளை கண்டறிந்து அதற்கு பாராட்டுகளையும் வெகுமதிகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story