மணமேடையில் வைத்தே ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை போட்டுக்கொண்ட மணமக்கள்


மணமேடையில் வைத்தே ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை போட்டுக்கொண்ட மணமக்கள்
x

அற்ப விஷயங்களுக்கு சண்டையிட்டு திருமணத்தை கெடுத்துக் கொண்ட மணமக்கள் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

புதுடெல்லி

மணமேடையில் வைத்தே சில அற்ப விஷயங்களுக்கு சண்டையிட்டு திருமணத்தை கெடுத்துக் கொண்ட மணமக்கள் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

மணமகன் மணமகளுக்கு வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்ட முயன்றதால் தகராறு தொடங்கியதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மணமகன் வலுக்கட்டாயமகா ஊட்டியது மணமகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, அவர் மணமகனை அறைந்தார், விரைவில் அது சண்டையாக மாறியது, விருந்தினர்கள் தலையிட்டு அதை நிறுத்த முடியவில்லை.

இந்த வேடிக்கையான வீடியோ டிசம்பர் 12 அன்று @gharkekalesh என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. இந்த வீடியோ 57,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் தலைப்பு நகைச்சுவையாக இருந்தது.




Next Story