தங்கும் விடுதிக்குள் அதிவேகமாக பாய்ந்த கார் - பெண் பலி: அதிர்ச்சி வீடியோ

கார் மோதியதில் தங்கும் விடுதியின் உரிமையாளர் பலியானார்.
தங்கும் விடுதிக்குள் அதிவேகமாக பாய்ந்த கார் - பெண் பலி: அதிர்ச்சி வீடியோ
Published on

பனாஜி,

கோவா மாநிலம் வஹடார் பகுதியில் தங்கும் விடுதி உள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை இரவு விடுதியின் உரிமையாளரான ரெமிடியா மேரி (வயது 57) விடுதி வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வேகமாக வந்த கார் விடுதிக்குள் புகுந்தது. கார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் விடுதி உரிமையாளர் ரெமிடியா மேரி படுகாயமடைந்தார். அவரை மீட்ட விடுதி ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெமிடியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com