தேர்தலில் வெற்றிபெற வியூகங்கள் வகுத்துள்ளோம்வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி


தேர்தலில் வெற்றிபெற வியூகங்கள் வகுத்துள்ளோம்வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 2 March 2023 6:45 AM GMT (Updated: 2 March 2023 6:45 AM GMT)

உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 3-ந் தேதி பெங்களூரு வருகிறார் என்றும், தேர்தலில் வெற்றிபெற வியூகங்கள் வகுத்துள்ளோம் என்றும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு-

முடிவு செய்துவிட்டோம்

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப (வெற்றி உறுதி ஏற்பு) யாத்திரையை தொடங்கியுள்ளோம். சாம்ராஜ்நகரில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (நேற்று) யாத்திரையை தொடங்கி வைத்தார். பா.ஜனதாவின் 4-வது யாத்திரையை உள்துறை மந்திரி அமித்ஷா 3-ந் தேதி (நாளை) தொடங்கி வைக்கிறார். தேவனஹள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் இந்த யாத்திரையை அவர் தொடங்கி வைத்து பேசுகிறார். தேர்தலில் வெற்றி பெற நாங்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளோம். எனது தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரையில் மந்திரிகள் கோபாலய்யா, சுதாகர், எஸ்.டி.சோமசேகர், அஸ்வத் நாராயண் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். எங்களின் குழு, 17 பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறது. இதற்கான தேதியை முடிவு செய்துவிட்டோம்.

வெற்றி பெறுவது உறுதி

இந்த விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா வருகிற 25-ந் தேதி தாவணகெரேயில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். எடியூரப்பா சிறைக்கு செல்ல காங்கிரஸ் தான் காரணம். நாங்கள் நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. அதனால் எங்கள் கட்சி பெரும்பான்மை பலத்தை தாண்டி வெற்றி பெறுவது உறுதி.

மொத்தம் 4 விஜய சங்கல்ப யாத்திரை நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் அதிகமாக உள்ளன. ஆனால் பா.ஜனதாவில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.



Next Story