பயங்கரவாத செயல்களை முறியடிப்போம்
பயங்கரவாத செயல்களை முறியடிப்போம் என்று நளின்குமார் கட்டீல் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
மங்களூரு:-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த கங்கனாடி அருகே நாகுரி பகுதியில் ஆட்டோவில் கொண்டு சென்ற குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் வெடிகுண்டை எடுத்து சென்றவர் படுகாயம் அடைந்தார். ஆட்டோ டிரைவர் லேசான காயம் அடைந்தார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் நளினகுமார் கட்டீல் எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில், 'பயங்கரவாத அமைப்புகளை தடை செய்த பிறகு சிலர் தலை தூக்கியுள்ளனர். நாகுரி குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு போலீசார் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மங்களூருவில் போலீசார் அமைதியை நிலைநாட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால், அவர்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும். பயங்கரவாதத்தை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.