எனது மகன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மோடி, அமித்ஷா தான் முடிவு எடுப்பார்கள் - எடியூரப்பா


எனது மகன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மோடி, அமித்ஷா தான் முடிவு எடுப்பார்கள் - எடியூரப்பா
x

அடுத்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கர்நாடக பா ஜ க வின் முன்னலால் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார் .

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கிறது இத்தேர்தலை சந்திக்க பாஜக , காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன .இருப்பினும் வரும் தேர்தலில் ஆளும் பாஜகவைத் தோற்கடித்து , பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற காங்கிரஸ் திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது .

இந்த நிலையில் அடுத்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ,தன்னுடைய சட்டப்பேரவைத் தொகுதியை எனது மகன் பி.ஒய்.விஜயேந்திரனுக்காக விட்டுக்கொடுக்கிறேன்.

ஷிகாரிபுரா வாக்காளர்கள் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளகிறேன் என்றார்.

இந்தநிலையில், இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவடு:-

நேற்று, எனது மகன் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார் என்றும், இறுதி முடிவை பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோர் எடுப்பார்கள் என்றும் கூறினேன். அவர்களின் முடிவே இறுதியானது. என்னால் அழுத்தம் கொடுக்க முடியாது & பரிந்துரையை மட்டுமே என்னால் கூற முடியும். மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றார்.

எடியூரப்பா ,1983 ஆம் ஆண்டு முதல் ஒன்பது முறை ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டுள்ளார் .அதில் 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story