யஷ்வந்தபுரம்-முருடேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெங்களூரு:-
பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து உத்தர கன்னடா மாவட்டம் முருடேஸ்வருக்கு வருகிற 10-ந் தேதி (நாளை) முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு ரெயில் (06563) இயங்க உள்ளது. அதுபோல வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முருடேஸ்வர்- யஷ்வந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் (06564) இயங்குகிறது. யஷ்வந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 12.55 மணிக்கு முருடேஸ்வர் செல்கிறது.
முருடேஸ்வரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு யஷ்வந்தபுரத்திற்கு வருகிறது. இந்த ரெயில்கள் சிக்கபானவாரா, நெலமங்களா, குனிகல், சரவணபெலகோலா, சென்னராயப்பட்டணா, ஹாசன், சக்லேஷ்புரா, சுப்பிரமணிய ரோடு, கபகா புத்தூர், பண்ட்வால், சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாப்புரா, பைந்தூர், பட்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.