மங்களூரு சம்பவம்: ஷாரிக் உடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சோதனை - கர்நாடக ஏடிஜிபி பேட்டி


மங்களூரு சம்பவம்: ஷாரிக் உடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சோதனை  - கர்நாடக ஏடிஜிபி பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2022 12:57 PM IST (Updated: 21 Nov 2022 1:24 PM IST)
t-max-icont-min-icon

மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் கூறியுள்ளார்.

மங்களூரு,

மங்களூருவில் ஆட்டோ வெடிகுண்டு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்ட பின் ஏடிஜிபி அலோக் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மைசூரில் தங்கி இருந்த வீட்டிலிருந்து வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சர்க்யூட், தீப்பெட்டி, பேட்டரி, மெக்கானிக்கல் டைமர், ஆதார் கார்டு, சிம்கார்டுகள், மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்து தடயவியல் சோதனை நடைபெற்று வருகிறது.

உபா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஷாரிக் தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்.

மங்களூருவில் ஆட்டோ வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட உள்ளது. மங்களூரு ஆட்டோ வெடித்த வழக்கில் காயமடைந்த ஷரிக் ஏற்கனவே ஒரு வழக்கில் தேடப்பட்டவர் தான். இரு வழக்குகளில் உபா சட்டம் போடப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்கில் தேடப்பட்டவர் தான் ஷரிக்.

ஆட்டோவில் பயணித்த ஷரிக்கிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடைப்பெற்று வருகிறது. ஆட்டோவில் குண்டு வெடித்தது தொடர்பாக மைசூரில் 2 பேர், கோவையில் ஒருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

மங்களூரு வெடிகுண்டு தாக்குதலுக்கும் கோவை கார் சிலிண்டர் வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்க கோவை தனிப்படை போலீசார் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மங்களூரு விரைந்தனர். மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை, மதுரை மற்றும் கேரளாவில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.


Next Story