மேற்கு வங்கம்: ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் பலி..! பிரதமர் இரங்கல்
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்ட மல்லர்பூர் காவல் நிலையப் பகுதியில் ஆட்டோ மீது பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனை அடைகிறேன். காயமடைந்தவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்தார். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹாரில் உள்ள ஜல்பேஷ் கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன்னில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். அந்த வேனில் இருந்த 27 பேரில் 16 பேர் சிகிச்சைக்காக ஜல்பைகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.