மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு!


மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு!
x

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூரில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் வீட்டில் குண்டுவெடிப்பு நடந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்து 2 பேரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

மேற்கு வங்க முதல்வரின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் பேரணி சம்பவ இடத்திற்கு அருகில் நடைபெற இருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அபிஷேக் பானர்ஜியின் பொது பேரணி சனிக்கிழமை காண்டாய் நகரில் திட்டமிடப்பட்டுள்ளது. பேரணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

அர்ஜூன் நகர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீடு உள்ளது. ராஜ்குமார் மன்னா வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story