மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்


மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்
x

மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ந் தேதி தொடங்கிய நிலையில், வரும் 9-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதி நடக்கிறது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது இனிப்புகளை ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டி விட்டுக்கொண்டனர்.


Next Story