மேற்கு வங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாதி கைது


மேற்கு வங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாதி கைது
x

கோப்புப்படம்

மேற்கு வங்காளத்தில் அல்கொய்தா பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மதுராபூரில் 'இந்திய துணைக்கண்ட அல்கொய்தா' என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவர் 20 வயதான இளைஞர். அந்த பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதில் அவர் உதவி வந்தார். போலி இந்திய அடையாள அட்டைகளை தயாரித்து தந்துள்ளார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மறைவிடம் பற்றி தெரிய வந்தது. கொல்கத்தா தனிப்படை போலீசார் பொறி வைத்து அவரை பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 14-ந் தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.


Next Story