விநாயகர் சிலை கரைக்கும்போது குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
விநாயகர் சிலை கரைக்கும்போது குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானார்.
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கடந்த மாதம் 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் துமகூரு டவுன் முடிகெரே கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்த பகுதியில் உள்ள குளத்தில் கரைத்தனர்.
அப்போது விநாயகர் சிலை கரைப்பதற்காக வந்த சிறுவன் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். பின்னர் குளத்தில் மூழ்கி பலியானான். விசாரணையில், குளத்தில் மூழ்கி இறந்த சிறுவன் பீமசந்திராவை சேர்ந்த சேத்தன் (வயது 15) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெல்லவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story