மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? - மம்தா பானர்ஜி கேள்வி


மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? - மம்தா பானர்ஜி கேள்வி
x

மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தா,

கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

நான், பிர்ஹத் ஹக்கிம், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதா பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒவ்வொருவரையும் 'திருடன்' என்று பா.ஜனதா முத்திரை குத்துகிறது.

நாங்கள் திருடர்கள், அவர்கள் புனிதமானவர்கள் என்பதுபோல் பிரசாரம் செய்கிறது. நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்தால், பா.ஜனதாவினரின் நாக்கை அறுத்திருப்பேன். திரிணாமுல் காங்கிரசிடம் உள்ள பணத்தை பற்றி பா.ஜனதாவினர் பேசுகிறார்கள். அப்படியானால், மராட்டிய மாடல் பாணியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

ஹவாலா மூலமாக வெளிநாடுகளில் பா.ஜனதா பணத்தை பதுக்குகிறது. விசாரணை அமைப்புகளையும், கருப்பு பணத்தையும் பயனபடுத்தி, மாநில அரசுகளை கவிழ்க்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெற விடமாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story