பருத்தி காட்டில் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம்; கல்லால் அடித்து மனைவி, கள்ளக்காதலன் கொலை


பருத்தி காட்டில் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரம்; கல்லால் அடித்து மனைவி, கள்ளக்காதலன் கொலை
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

பருத்தி காட்டில் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரத்தில் கல்லால் அடித்து மனைவி, கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டனர்.

யாதகிரி:

யாதகிரி மாவட்டம் சுராபுரா தாலுகா கெம்பாவி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கச்சாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மல்லண்ணா. தொழிலாளி. இவரது மனைவி பசம்மா. பசம்மாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நடகவுடா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துவந்தனர். நேற்று அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள பருத்தி காட்டிற்குள் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். அப்போது அந்த பகுதி வந்த மல்லண்ணா, மனைவி வேறொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், மனைவியுடன் வாக்குவாதம் செய்தார். இந்த சமயத்தில் ஆத்திரமடைந்த மல்லண்ணா, தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் நடவுகடா ஆகிய 2 பேரையும் தாக்கினார். மேலும், கல்லால் தாக்கி 2 பேரையும் கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மல்லண்ணாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story