ஐக்கிய ஜனதாதளம் வெளியேற்றம்: மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு சிக்கல்


ஐக்கிய ஜனதாதளம் வெளியேற்றம்: மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு சிக்கல்
x

ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியதால் மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 5 மாநிலங்களவை எம்.பி.க்களை கொண்ட ஐக்கிய ஜனதாதளம் வெளியேறியதால், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதில் பா.ஜனதா சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்களவையை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கு தனி பெரும்பான்மை உள்ளது.

மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 இடங்களில் குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் பா.ஜனதாவுக்கு 91 எம்.பி.க்கள்தான் உள்ளனர். அ.தி.மு.க., இதர மாநில கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோரை சேர்த்தால், 110 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது.

இருப்பினும், பெரும்பான்மைக்கு பற்றாக்குறை இருப்பதால், பிஜு ஜனதாதளம் அல்லது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்சிகளுக்கு மாநிலங்களவையில் தலா 9 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கட்சிகள், ஏற்கனவே சில மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.

இவற்றில் ஒரு கட்சி மட்டும் ஆதரித்தாலும், மேலும் சில சுயேச்சைகளையும் இழுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.


Next Story