வருவாய்த்துறை பெண் அதிகாரி மீது ஆசிட் வீச்சு தாக்குதல்; ஜாமினில் சிறையில் இருந்து வந்த நபர் வெறிச்செயல்


வருவாய்த்துறை பெண் அதிகாரி மீது ஆசிட் வீச்சு தாக்குதல்; ஜாமினில் சிறையில் இருந்து வந்த நபர் வெறிச்செயல்
x

ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்த நபர் வருவாய்த்துறை பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை தாசில் அலுவலகத்தில் வருவாத்துறை அதிகாரியாக இளம்பெண் பணியாற்றி வந்தார்.

அவருக்கு அதே பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் (வயது 30) தொல்லை கொடுத்துவந்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நரேஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நரேஷ் குமார் சிறையில் இருந்த சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், வருவாய்த்துறை பெண் அதிகாரி நேற்று முன் தினம் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவரை இடைமறித்த நரேஷ் குமார் அவருக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அப்பெண் உதவிகேட்டு கத்தியுள்ளார். இதனால், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அப்பெண் முகம் மீது நரேஷ் ஊற்றியுள்ளார். அப்போது, சுதாரித்துக்கொண்ட பெண் அதிகாரி விலகியுள்ளார். இதில், அவர் வைத்திருந்த செல்போன் மீது ஆசிட் விழுந்துள்ளது. இதனால், பெண் அதிகாரி எந்த வித காயமுமின்றி தப்பினார்.

வருவாய்த்துறை பெண் அதிகாரி மீது ஆசிட் வீசிய நரேஷ் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வருவாய்த்துறை அதிகாரி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய நரேஷை தீவிரமாக தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story