பட்டப்பகலில் வீட்டின் முன் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்


பட்டப்பகலில் வீட்டின் முன் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்
x

பெண்ணிடம் கொள்ளையடித்த நபர் அருகில் இருந்த இளைஞரின் செல்போனையும் திருடி சென்றார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நேற்று பெண் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, முகமூடி அணிந்து வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு இளம்பெண்ணை மிரட்டினார். பின்னர், அவர் அணிந்திருந்த நகையை கழற்றி தரும்படி பெண்ணிடம் மிரட்டியுள்ளார்.

திருடன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட முகமூடி கொள்ளையன் அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டியுள்ளான்.

பின்னர், இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த கொள்ளையன் தனது கூட்டாளியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றான்.

இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு துப்பாக்கி காட்டி பெண், இளைஞனிடம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறனர்.



Next Story