குஜராத்தில் வந்தே பாரத் ரெயில் மோதியதில் 54 வயது பெண் உயிரிழப்பு!
குஜராத்தில் இன்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54 வயது பெண் மீது வந்தே பாரத் அதிவேக ரெயில் மோதியது.
ஆமதாபாத்,
குஜராத்தில் ஆனந்த் ரெயில் நிலையம் அருகே இன்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54 வயது பெண் மீது வந்தே பாரத் அதிவேக ரெயில் மோதியது. இதில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
காந்திநகரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் அந்த பெண் பலியானார். அவரது பெயர் பீட்ரைஸ் ஆர்க்கிபால்ட் பீட்டர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரெயில்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. தண்டவாளத்தை கடக்க முயலும் கால்நடைகள் மீது வந்தே பாரத் ரெயில்கள் மோதுகின்றன. இதனால் கால்நடைகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியாகின்றன. வந்தே பாரத் ரெயிலின் முன்பகுதியும் சேதமடைந்து விடுகின்றன. இது பெரும் சர்ச்சையாக தொடருகிறது.
Related Tags :
Next Story