பணியின் போது சினிமா பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 4 பெண் போலீசார் சஸ்பெண்ட்


பணியின் போது சினிமா பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 4 பெண் போலீசார் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 16 Dec 2022 10:48 AM IST (Updated: 16 Dec 2022 10:48 AM IST)
t-max-icont-min-icon

3 பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு நடனமாட அதை மற்றொருவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தலம் கட்டும்பணிகள் ராம ஜென்மபூமி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராமஜென்ம பூமி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கான்ஸ்டபிள்கள் 4 பேர் பணியின் போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

3 கான்ஸ்டபிள்கள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

பணியின் போது பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் 4 பெண் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.




Next Story