கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சொட்டு சொட்டாக தண்ணீர் எடுக்கும் பெண்கள்.. கலங்க வைக்கும் வீடியோ.!

ஆழமான அந்த கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பெண்கள் தண்ணீர் எடுக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சொட்டு சொட்டாக தண்ணீர் எடுக்கும் பெண்கள்.. கலங்க வைக்கும் வீடியோ.!
Published on

மும்பை,

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலம் கோஷிம்படா பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அங்குள்ள பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் குடங்களை சுமந்து தொலை தூரத்தில் உள்ள கிணற்றிற்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

ஆனாலும் வற்றிய நிலையில் உள்ள அந்த கிணற்றிலிருந்து சேறு கலந்த தண்ணீரே எடுக்க முடிவதாகவும், அதை குடிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆழமான அந்த கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பெண்கள் தண்ணீர் எடுக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com