தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உப்பள்ளி:-

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த மங்கலகட்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா ஒசமணி (வயது 35). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணிற்கும் கடந்த 5 ஆண்டகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. ரேணுகா பக்கிரப்பா ஒசமணியின் அத்தை மகள் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிபோதைக்கு அடிமையாக இருந்த அவர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கணவனுடன் கோபப்பட்டு கொண்டு, ரேணுகா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் இவர் மனைவியின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வரும்படி கூறினார். மேலும் அவரது குடும்பத்தினரும் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் ஆளான பக்கிரப்பா ஒசமணி, மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் விசாரித்தனர். அப்போது பக்கிரப்பா ஒசமணி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எனது தற்கொலைக்கு மாமியார் சாவவ்வாதான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story