மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

கடபா அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா குண்டூரு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ். விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக சென்ற மின்கம்பி மீது அவரது கை உரசிவிட்டது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி கடபா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story