8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x

8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கொப்பல்:

கொப்பல் தாலுகாவில் தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு மகள் உள்ளாள். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவளுக்கு கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதி அடைந்து வந்தாள். இதையடுத்து அவளை மீட்ட பெற்றோர், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறினார். இதைகேட்டு அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து சிறுமியிடம் கேட்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அந்த சிறுமி தினமும் பள்ளிக்கு தனியாக சென்று வந்துள்ளாள். அப்போது அவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story