வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு, டிச.23-
பெங்களூரு வித்யாரண்யபுரா போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த தபரேஜ்(வயது 30) என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டு இருக்கும் கார், மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.5¼ லட்சம் மதிப்பிலான 3 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான தபரேஜ் மீது வித்யாரண்யபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story