சமுதாயத்திற்காக இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்; பத்மஸ்ரீ சாளுமரத திம்மக்கா வலியுறுத்தல்
சமுதாயத்திற்காக இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என பத்மஸ்ரீ சாளுமரத திம்மக்கா வலியுறுத்தி உள்ளார்.
ஆனேக்கல்;
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா குட்டட்டி கிராமத்தில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்ட பத்மஸ்ரீ சாளுமரத திம்மக்கா கூறியதாவது:-
இளைஞர்கள் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருக்க கூடாது. சமுதாயத்திற்காக ஏதாவது செய்யவேண்டும். உங்களை நீங்களே சமூக பணியில் ஈடுபடுத்தி கொண்டு, சமுதாயத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.
75-வது சுதந்திர தினத்தின் பவளவிழாவை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்திருந்தோம். அதற்காக இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தோம்.
சமுதாயம் நமக்கு என்ன செய்தது என்று நிைனத்து வாழாமல், சமுதாயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று நினைத்து வாழவேண்டும். இதை ஒவ்வொரு இளைஞரும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story