பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த இளைஞர் - வைரல் வீடியோ


பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த இளைஞர் - வைரல் வீடியோ
x

பரபரப்பான சாலையில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த இளைஞரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஐதராபாத்,

சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டேங்கர் லாரி, சரக்கு லாரி, டிரக், உள்பட பல்வேறு சரக்கு வாகன டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேங்கர் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால், பதற்றமடைந்த வாகன ஓட்டிகள் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனிடையே, ஐதராபாத்தின் சன்ஷல்குடா பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக குதிரையில் வாடிக்கையாளருக்கு உணவு கொண்டு சென்றார்.

பரபரப்பான ஐதராபாத் சாலையில் உணவு டெலிவரி நிறுவன இளைஞர் குதிரையில் உணவு கொண்டு சென்ற வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story