துணை ஜனாதிபதி பதவிக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்: மார்கரெட் ஆல்வா வாழ்க்கை வரலாறு


துணை ஜனாதிபதி பதவிக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்:  மார்கரெட் ஆல்வா வாழ்க்கை வரலாறு
x

துணை ஜனாதிபதி பதவிக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா வாழ்க்கை வரலாறு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு:

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்

துணை ஜனாதிபதி பதவிக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. பா.ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராக மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீஷ் தன்கர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒருமித்த வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். அவர் 1942-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தார்.

அவர் பெங்களூருவில் உள்ள மவுண்ட் கார்மெல் பல்கலைக்கழகத்தரில் பி.ஏ. எல்.எல்.பி. பட்டம் பெற்றார். அவர் வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டார். 1964-ம் ஆண்டு நிரஞ்சன் ஆல்வாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக அவரது கணவர் கடந்த 2018-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

மக்களவை உறுப்பினர்

1999-ம் ஆண்டு உத்தர கன்னடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் மாநிலங்களவை உறுப்பினராக 4 முறை நியமிக்கப்பட்டார். அதாவது 1970, 1980, 1986, 1992 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கு அவர் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் தனது 42-வது வயதில் மத்திய மந்திரியாக பணியாற்றினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோரின் மந்திரிசபையில் பணியாற்றினார்.

கோவா, குஜராத், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் கவர்னராகவும் அவர் செயல்பட்டார். அவர் கடைசியாக உத்தரகாண்ட் கவர்னர் பதவியில்ட இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பணியாற்றினார். சிறிது காலம் மாநிலங்களவை துணைத்தலைவராகவும் பதவி வகித்தார். பரபரப்பை ஏற்படுத்தினார் கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் தனது மகனுக்கு போட்டியிட டிக்கெட் வழங்குமாறு மார்கரெட் ஆல்வா கட்சி மேலிடத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், காங்கிரசில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story