மராட்டியத்தில் 75 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப மந்திரி சபை முடிவு

மராட்டியத்தில் 75 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் 75 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
75 ஆயிரம் காலி பணியிடங்கள்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. அப்போது மாநிலத்தில் காலியாக உள்ள 75 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பி, சி, டி-பிரிவு அரசு ஊழியர்கள் 75 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வை டி.சி.எஸ். மற்றும் ஐ.பி.பி.எஸ். நிறுவனங்கள் நடத்த உள்ளது.
நிதி ஆயோக் அமைப்பு
இதேபோல மாநிலத்தில் நிதி ஆயோக் போன்ற அமைப்பையும் தொடங்க மந்திரி சபையில் முடிவு செய்யப்பட்டது. 'மகாராஷ்டிரா பரிமாற்றத்துக்கான நிறுவனம்' என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள இந்த அமைப்பு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
இதுதவிர மரத்வாடா, விதர்பா, வடமராட்டிய பகுதியில் சிறுபான்மை சமூக பெண்களுக்காக 2 ஆயிரத்து 800 மகளிர் சுய உதவி குழு தொடங்கவும் மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டது.






