பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரர் கைது

மலாடு ஓட்டலில் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரர் கைது
Published on

மும்பை, 

மலாடு ஓட்டலில் பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணின் உடல் மீட்பு

மும்பை மலாடு பகுதியில் உள்ள அக்சா லாட்ஜில் நேற்று பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்பெண்ணுடன் தங்கி இருந்த ஆண் தலைமறைவாகி விட்டார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அங்கு நடத்திய பரிசோதனையில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அப்பெண் கோரேகாவ் பகத்சிங் நகர் பகுதியை சேர்ந்த அமல்மேரி சார்லி(வயது47) என்பதும், விதவையான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

வீட்டு வேலைக்காரர் கைது

இவருக்கு காந்திவிலி தானுக்கர்வாடியை சேர்ந்த வீட்டு வேலை பார்த்து வந்த அமித் புவட் (36) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி லாட்ஜில் அறை எடுத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். அப்போது, தான் அக்சா லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது ஏற்பட்ட தகராறு காரணமாக அமல்மேரி சார்லியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அவர் தப்பிசென்றது தெரியவந்தது.

இதையடுத்து காந்திவிலியில் பதுங்கி இருந்த வாலிபர் அமித் புவடை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com