உத்தரபிரதேச மக்கள் தங்கள் சொந்த ஊரை பெருமையுடன் அடையாளப் படுத்துகின்றனர்- யோகி ஆதித்யநாத் பேச்சு

உத்தரபிரதேச மக்கள் தங்கள் சொந்த ஊரை தற்போது பெருமையுடன் அடையாளப்படுத்துகின்றனர் என மும்பையில் நடந்த விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.
மும்பை,
உத்தரபிரதேச மக்கள் தங்கள் சொந்த ஊரை தற்போது பெருமையுடன் அடையாளப்படுத்துகின்றனர் என மும்பையில் நடந்த விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.
சொந்த ஊர் பெருமை
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 2 நாள் சுற்றுப்பயணமாக மும்பை வந்து உள்ளார். அவர் அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழில்துறையினரை ஈர்க்கவும், சினிமா நட்சத்திரங்களை சந்திக்கவும் வந்தார்.
இந்தநிலையில் மும்பையில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கு உத்தரபிரதேச மக்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தியதில்லை. வெளிநாடு அல்லது இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றதாலும் அவர்கள் சொந்த ஊரை கூறுவதில்லை. ஆனால் தற்போது அவர்கள் தங்கள் உத்தரபிரதேச அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்துகின்றனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்தவன் என கூற அவர்கள் தயக்கமோ, அவமானமாகவோ கருதுவதில்லை.
பெண்கள் பாதுகாப்பு
சட்டம்- ஒழுங்கு மற்றும் பெண் பாதுகாப்பு அங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சாதி, மத பாகுபாடு இன்றி 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சியில்லாத போது இளம்பெண்கள் பள்ளி, சந்தைகளுக்கு கூட அனுப்பப்பட மாட்டார்கள்.
தற்போது அந்த காட்சிகள் மாறி உள்ளன. பெண்கள் பாதுகாப்பை உணர தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.






