வரலாற்றை மாற்றிய வந்தவாசி போர்

வந்தவாசி கோட்டையை கைப்பற்ற பிரெஞ்சுப்படை லாலி என்பவர் தலைமையிலும், ஆங்கிலேயப் படை சர் அயர் கூட் தலைமையிலும் போரிட்டன.
வரலாற்றை மாற்றிய வந்தவாசி போர்
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில், 16-17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை அமைந்துள்ளது. இந்தக்கோட்டை வரலாற்று சிறப்புமிக்க பல போர்களை சந்தித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்கது, கி.பி 1760-ல் நடந்த மூன்றாவது கர்நாடகப் போரின் ஒரு பகுதியான வந்தவாசி போர். இதில் பிரெஞ்சுப் படைகளும், ஆங்கிலப்படைகளும் மோதின. வந்தவாசி கோட்டையை கைப்பற்ற பிரெஞ்சுப்படை லாலி என்பவர் தலைமையிலும், ஆங்கிலேயப் படை சர் அயர் கூட் தலைமையிலும் போரிட்டன. இதில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றனர். இந்தப் போர்தான், ஆங்கிலேயர்கள் சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆள்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இதன் பிறகும் பல போர்களை சந்தித்த காரணத்தால் கோட்டை சிதைந்து போனது.

வந்தவாசி கோட்டையின் புகைப்படத் தொகுப்பு:-

1. கோட்டையின் முகப்புத் தோற்றம்

2. வந்தவாசி கோட்டையில் உள்ள சுரங்கப்பாதை செஞ்சி கோட்டை வரை செல்வதாக சொல்கிறார்கள்.

3. லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, வந்தவாசி போர் குறித்த நினைவு பதக்கம்.

4. ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி. இது தற்போது வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com