ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி. ஸ்டிரிக்ஸ் லேப்டாப்


ஏ.எஸ்.யு.எஸ். ஆர்.ஓ.ஜி. ஸ்டிரிக்ஸ் லேப்டாப்
x

ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் வீடியோ கேம் பிரியர்களைக் கருத்தில் கொண்டு ஆர்.ஓ.ஜி. (ரிபப்ளிக் ஆப் கேமர்ஸ்) மாடல் லேப் டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இதில் இன்டெல் கோர் ஐ 9 ஹெச்.எக்ஸ். பிராசஸர் உள்ளது. இதனால் வீடியோ கேம்களை விருப்பம் போல விளையாட முடியும். விளையாட்டு பிரியர்கள் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி விளையாடுவதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இதன் பிராசஸர் அமைந்துள்ளது. 17.3 அங்குல எல்.சி.டி. திரை உள்ளது.

12-வது தலைமுறை இன்டெல் பிராசஸர் உள்ளது. 2 டி.பி. வரை இதன் நினைவகத் திறனை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இதில் விண்டோஸ் 11 இயங்கு தளம், 4 ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,59,990. இதில் 2 டி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.3,99,990.


Next Story