இறகுகள் இருந்தால் நாமும் பறவைகளே


இறகுகள் இருந்தால் நாமும் பறவைகளே
x

ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நகைகள் பிரபலமடைந்து அனைவராலும் விரும்பி அணியப்படும். அதுபோன்று தற்போது பறவைகளின் பலவிதமான இறகுகளைக் கொண்டு செய்யப்படும் நகைகள், கைப்பைகள், காதணிகள், தலை அலங்கார பொருட்கள் மற்றும் துணிகள் போன்றவை பெண்களால் விரும்பி வாங்கப்படுகின்றன..ஃபேஷன் உலகில் இறகுகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. இறகுகளைக் கொண்டு செய்யப்படும் எந்தப் பொருட்களும் வசந்த காலத்திலும், கோடைகாலத்திலும் பயன்படுத்துவதற்கு சரியான பொருத்தமாக இருக்கின்றன.

இறகுகள் எந்தவொரு பாணிக்கும் பொருந்தி ஒரு அலங்கார முறையீட்டை கொடுக்கின்றன.இறகுகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் எந்த ஒரு பொருள் அல்லது ஆடையானது மிகவும் ஆடம்பரமான, விசித்திரமான தோற்றத்தை தருவதாக இருக்கின்றது.இன்றளவும் வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆடைகளை அலங்கரிப்பதில் இறகுகள் தவிர்க்க முடியாத இடத்தை வகிப்பதை பார்க்க முடியும்.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மயில் தோகைகளைக் கொண்டும்,பறவைகளின் இறகுகளைக் கொண்டும் காதணிகளை அணிந்து கொள்வது மிகவும் பிரபலமாக இருந்தது.ஆடைகள், காலணிகள்,பெல்ட்கள் மற்றும் பைகளை அலங்கரிப்பதற்கு இன்றளவும் இறகுகளைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது.இறகுகள் அன்றாட நாகரீகத்தின் ஒரு அங்கமாகிவிட்டன என்று சொல்லுமளவுக்கு அனைத்து அலங்காரப் பொருட்களிலும் அவை இடம்பெற்றிருக்கின்றன.

நகைகள் மற்றும் நகைப்பெட்டிகள்

காதணிகள், வளையல்கள் அல்லது நெக்லஸ்கள் என பல வகையான ஃபேஷன் நகைகள் இறகுகளின் உதவியுடன் செய்யப்படுகின்றன.வண்ணமயமான மொசைக் அல்லது பேண்டட் வடிவமைப்புகளை உருவாக்க, இறகுகளை அடுக்கு பாணியில் பயன்படுத்துகிறார்கள் .இரத்தினக் கற்கள் மற்றும் செயின்களில் இறகுகளைப் பயன்படுத்தி ஒரு விதமான பருத்த தோற்றத்துடனும், கண்ணைக் கவரக்கூடிய வகையிலும் அணிகலன்கள் செய்யப்படுகின்றன.

நகைப் பெட்டிகளை அலங்கரிக்க இறகுகளை அணிகலன்களாகப் பயன்படுத்துவதும் பழக்கம் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்திருக்கின்றது. இப்பொழுதும் அது தொடர்கின்றது. ஆடம்பரமான நகை பெட்டிகளுக்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை உருவாக்க முத்து, மணிகள் அல்லது சீக்வின்ஸ்கள் போன்ற பிற ஃபேஷன் பொருட்களுடன் இறகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.. இவ்வாறு பயன்படுத்தி செய்யப்படும் நகைப் பெட்டிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை..

சிகை அலங்காரப் பொருட்கள்

இறகுகள் வைத்து செய்யப்படும் ஃபாஸ்டென்சர்கள் மற்றும் ஹெட் பேண்ட்கள், பாபி பின் கிளிப்புகள் போன்றவை ஃபேசினேட்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன.இறகுகளை முடி பாகங்கள் போன்று வைத்து அலங்கரித்துக் கொள்வது ஸ்டைலான இளம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றது. வெவ்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் பாணிகளுக்கு ஏற்றவாறு, இறகுகள் கொண்ட வடிவமைப்பானது, அழகாக கட்டமைக்கப்படுகின்றது.

ஆடைகள்

கோட்ச்சர் அல்லது ப்ரேட், வெவ்வேறு வண்ண இறகுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஆடை வகையாகும்..பாவாடைகளில் இறகுகளை கைகளால் தைத்து அலங்கரிக்கிறார்கள். அதேபோல் டேங்க் டாப்ஸ் அல்லது கார்டிகன் நெக்லைன்களை இறகுகளை வைத்து கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கிறார்கள். இறகுகளைத் துணிகளில் வைத்து தைய்க்கும்பொழுது அவை துணிகளுக்கு வண்ணமயமான தோற்றத்தையும், கவர்ச்சிகரமான அழகையும் கொடுத்து பார்ப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டி வாங்க வைக்கின்றன.


Next Story