விவோ ஒய் 100

விவோ நிறுவனம் புதிதாக ஒய் 100 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
விவோ ஒய் 100
Published on

இது 6.38 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென் சிடி 900 எஸ்.ஓ.சி. பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மற்றும் பன் டச் 13 இயங்குதளம் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பசிபிக் நீல நிறம் கண்கவரும் வகையில் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 44 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, தங்க நிறம், நீலம் ஆகிய நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.24,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com