தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு.! மருத்துவத்துறை தகவல்


தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு.! மருத்துவத்துறை தகவல்
x

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை (13 நாட்கள்) தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.


Next Story