

சமயபுரம்:
14 பவுன் நகைகள் திருட்டு
சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சுந்தர்ராஜன்(வயது 37). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள டாக்டர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுந்தர்ராஜன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரியலூரில் உள்ள அவருடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று அங்கிருந்து அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கிரில் கேட் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் சமயபுரம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் மருத்துவமனை குடியிருப்பில் உள்ளவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.