லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திண்டிவனம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவவ் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள மாநில எல்லை சோதனை சாவடியில் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நள்ளிரவு திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது.

விசாரணையில் தமிழக ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்னர். ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்த திண்டிவனம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வடிவேலுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

டிரைவர் கைது

பின்னர் பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகள் வேலூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வடிவேலுவை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப் பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.


Next Story