அரியலூரை சேர்ந்த 180 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


அரியலூரை சேர்ந்த 180 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 180 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

அரியலூர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், துணை செயலாளர் ராம ஜெயலிங்கம் ஆகியோர் தலைமையில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருகட்டமாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த டாக்டர் ஜெயராமன், தேவா, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த செந்தில் உள்பட 180 பேர் அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்தனர். பின்னர் சேலத்தில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அனைவரும் சென்று கட்சியில் இணைந்தனர். அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


Next Story