தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 183 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 183 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 July 2023 1:57 AM IST (Updated: 9 July 2023 5:08 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 183 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காண்பதற்காக தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அமர்வு நீதிபதி (போக்சோ வழக்குகள்) சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.கூடுதல் சார்பு நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, தஞ்சை வக்கீல் முருகவேலு ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல் வழக்குகள், குற்றவியல் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணப்பட்டது.

183 வழக்குகளுக்கு தீர்வு

மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்ற சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, வக்கீல் முல்லை ஆகியோர் கொண்ட 2-வது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்ட சட்ட பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 1,725 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 183 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 3 லட்சத்து 34 ஆயிரத்து 734 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story